Pengerusi Jawatankuasa Tetap Kesihatan, Kebajikan, Pemberdayaan Wanita Dan Keluarga, Dr Siti Mariah Mahmud bergambar dengan peserta Ekspo Hasil Suri Selangor Sempena Hari Wanita Peringkat Selangor 2020 di Pusat Konvensyen Shah Alam di Shah Alam pada 8 Mac 2020. Foto FILZAH YAMAL/SELANGORKINI
SELANGOR

கை விணைப் பயிற்சி பெறுவீர்- சித்தி மாரியா

ஷா ஆலம், மார்ச் 9-

‘சிலாங்கூர் விவேக தாயன்பு’ (கிஸ்) திட்டத்தின் கீழ் உதவிப் பெறுபவர்களின் திறனை மேம்படுத்த தஞ்சோங் சூரி திட்டத்தை மாநில அரசாங்கம் தோற்றுவித்ததன் மூலம் தயாரிப்பு பொருளின் தரமும் வருவாயுன் உயர்ந்துள்ளது என்று மகளிர் மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஹ்முட் கூறினார்.

“இத்திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு முதலில் கை விணைப் பொருள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்ட பின்னரே அவர்கள் வீட்டில் இருந்து தயாரிக்கும் பொருட்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது” என்றார் அவர்.
“குடும்ப மாதர்களில் பலர் பள்ளிப் பிள்ளைகளின் விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய பொருப்புகள் பல உள்ளதால், அவர்களால் வேளியே சென்று வேலை செய்வதில் சிரமத்தை எதிர்நொக்குகின்றனர்.

எனவே அவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கி வீட்டில் இருந்தபடி வேலை செய்வதை இத்திட்டம் ஊக்குவிக்கின்றது” என்று அவர் சொன்னார்.
“எனவே இந்த வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்கள் பார்க்கும் வேலைக்கு மணி ஒன்றுக்கு 10 ரிங்கிட் என்ற கணக்கில் ஊதியம் கிடைக்க வகை செய்யலாம்” என்று அவர் விவரித்தார்.


Pengarang :