Pantai Remis, Kuala Selangor. Foto portal Majlis Daerah Kuala Selangor
SELANGOR

ரிம. 16.3 செலவில் சிலாங்கூரில் கடற்கரை அரிப்பு தடுப்புத் திட்டங்கள்

ஷா ஆலம், மார்ச் 10-

கடற்கரை அரிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரிம.16.3 மில்லியன் செலவில் சிலாங்கூர் வடிகால் மற்றும் நீர் பாசன துறை பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியது. இத்திட்டங்கள் கோல லங்காட், பத்து லாவூட் கடற்கரை பகுதி உட்பட சுங்கை லாங், சபாக் பெர்ணம் மற்றும் பந்தாய் ரெமிஸ் ஆகியவற்றில் மேற்கோள்ளப்பட்டன என்றும் எஞ்சிய திட்டங்கள் 11ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்படும் என்றும் ஜேபிஎஸ் இயக்குநர் டத்தோ காப்பார் அஸான் கூறினார்.

“2015ஆம் ஆண்டு ‘தேசிய கடற்கரை அரிப்பு’ குறித்த மலேசிய ஆய்வறிக்கையின்படி 492 கிலோ மீட்டர் நீளத்திலான கடற்கரையை சிலாங்கூர் கொண்டுள்ளது” என்றார் அவர்.
மொத்த கடற்கரை பகுதிகளில் கடற்கரை அரிப்பு நிலை மூன்று பிரிவுகளாக வகைப்படித்தப்பட்டுள்ளன. 4.8 கிமீ கடுமையான நிலையாகவு, 18.6 கிமீ குறிப்பிடத்தக்க வகையிலும் 52.2 கிமீ இன்னும் மோசமடையாத நிலையிலும் உள்ளன என்று டேவான் ஜுப்ளி பேராக்கில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் காப்பார் தெரிவித்தார்.

1986ஆம் ஆண்டு தேசிய கடற்கரை அரிப்பு நடவடிக்கைகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தன, மிகவும் மோசமான நிலை, மோசமடந்து வரும் நிலை மற்றும் அதிக பாதிப்பு இல்லா நிலை என்று அவற்றின் பொருளாதார மதிப்பீட்டின் அளவில் வகைப் படித்தப்பட்டன.


Pengarang :