Ketua Pegawai Eksekutif Air Selangor, Suhaimi (tiga, kiri) dan Pengarah Eksekutif NIOSH, Ayob Salleh (tiga, kanan) bersama penerima Pasport Keselamatan pada Majlis Pelancaran Pasport Keselamatan NIOSH Air Selangor di Presint 19, Putrajaya pada 10 Mac 2020. Foto ihsan Air Selangor
SELANGOR

பாதுகாப்பு உத்தரவாத திட்டத்தில் ஆயர் சிலாங்கூர் குத்தகையாளர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும்

புத்ராஜெயா, மார்ச் 10-

வேலையிடத்து ஆபத்துகளைக் குறைக்கும் நடவடிக்கையாக பாதுகாப்பு உத்தரவாத திட்டத்தில் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து குத்தகையாளர்களும் கலந்து கொள்ள வலியுறுத்தப்படுவதாக சிலாங்கூர் நீர் நிர்வாகத்தின் (ஆயர் சிலாங்கூர்) தலைமைச் செயல்முறை அதிகாரி சுஹைமி கமருல்ஸாமான் கூறினார்.

“சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆகிய அம்சங்கள் தொடர்பான கொள்கைகள் அனைத்தும் முழுமையான அளவில் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிச் செய்ய தேசிய தொழிலாளர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கழகம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக” அவர் கூறினார். தொழிலாளர் பாதுகாப்பு பயிற்சியில் குத்தகையாளர்கள் பங்கேற்பதில் இருந்து விலக்களிப்பு வழங்குவதோடு கட்டுமானத் தொழிலிட பாதுகாப்பு அம்சத்திற்கு சிஐடிபி அங்கீகார பச்சை அட்டை வழங்குவதன் மூலம் வேலையிடப் பாதுகாப்புத் தரம் உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே வேளையில், இத்திட்டத்தில் பங்கேற்கும் குத்தகையாளர்களுக்கு 24 மணி நேர விபத்து காப்புறுதி திட்டத்தை தேசிய தொழிலாளர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கழகம் ஏற்படுத்தியுள்ளது.


Pengarang :