NATIONAL

பிரதமர் பொது மக்களை வீட்டில் இருக்கும் படி வேண்டி கேட்டுக் கொண்டார் !!!

கோலா லம்பூர், மார்ச் 19:

கோவிட்-19 வைரஸ் நோய் பரவல் தொடர்பில் நகர்வு கட்டுபாடு ஆணை விதித்த இரண்டாவது நாளில் பொது மக்களை வீட்டில் இருக்கும் படி பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் வேண்டி கேட்டுக் கொண்டார். நகர்வு கட்டுபாடு ஆணை செயல்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது. பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியே செல்ல வேண்டும் மாறாக கண்ட இடங்களுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என்று பிரதமர் பொது மக்களுக்கு நேரலை நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு வலியுறுத்தினார்.

நகர்வு கட்டுபாடு ஆணை மார்ச் 18 தொடங்கி 31 வரை 14 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் வேளையில் பொது மக்கள் வீடுகளில் அமைதியாக இருக்கும் படி பலமுறை வேண்டி கேட்டுக் கொண்டார்.

” வீட்டில் மட்டும் இருங்கள். பிள்ளைகளோடு, மனைவியோடு உங்களது நேரத்தை செலவு செய்யுங்கள். எங்கும் செல்ல வேண்டாம். இதன் மூலம் கோவிட்-19 பரவல் நோயை நீங்கள் தவிர்க்க முடியும். ஆண்டவன் புண்ணியத்தில் இந்த நோயை நாம் கட்டுப்படுத்த முடியும். இதனால் தான் நகர்வு கட்டுபாடு ஆணையை அரசாங்கம் செயல் படுத்த முனைப்பு காட்டியது. இந்த நடவடிக்கை நீங்கள் ஊர்களுக்கு செல்ல அல்ல, விருந்து நிகழ்ச்சிகளுக்கு போவதற்கு அல்ல, பேரங்காடியில் சோப்பிங் செல்வதற்கு அல்ல, சுற்றுலா செல்வதற்கும் அல்ல மாறாக நீங்கள் அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க எடுத்த நடவடிக்கை ஆகும். ” ஸ்தே அட் ஹோம் அண்ட் புரோடேக் யூர்செல்ப் அண்ட் பேமிலி”( வீட்டில் இருங்கள், உங்களையும் மற்றும் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்) என்று பலமுறை தமது உரையில் குறிப்பிட்டார்.


Pengarang :