Sejumlah 117 pokok buah-buahan ditanam di sekolah rendah dan menengah di bandar raya ini menerusi program Dusun@My Sekolah pada 4 Mac
NATIONAL

நடமாட்ட கட்டுப்பாடு ஆணை: காய்கறி விதைகளுக்கான கோரிக்கை உயர்வு!

கோலாலம்பூர், ஏப்.9-

நடமாட்ட கட்டுப்பாடு ஆணை கடந்த மாதம் பிரகடணப்படுத்தப்பட்டது முதல் காய்கறி விதைகள் மற்றும் விவசாய சாதனங்களுக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. இணையம் வாயிலாக விவசாய விதைகளுக்கான கோரிக்கைகள் 70 விழுக்காடு உயர்துள்ளதாக தாவர விதைகள் விற்கும் நிறுவன உரிமையாளரான ஃபார்ஹானா முகமது கூறினார்.

வெள்ளரி, தண்டு கீரை, கொத்தமல்லி, மஞ்சள் போன்றவற்றின் விதைகளுக்கான கோரிக்கைகள் அதிகளவில் இருப்பதாக பெர்னாமாவிடம் ஃபார்ஹான் தெரிவித்தார்.
விதைகள் விற்கும் கடைகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இணையம் வாயிலான எங்கள் சேவைகளே சம்பந்தப்பட்டவர்களின் தேர்வாகியுள்ளன என்றார் அவர்.

அதேவேளையில், ஹைடிரோபோனிக் முறையில் காய்கறிகளுக்கான தேவைகளும் அதிகரித்துள்ளன என்று நாற்றங்கால் மையத்தின் உரிமையாளர் முகமது ஷப்பிஃக் ஓஸ்மான் கூறினார்.


Pengarang :