Sepanjang PKP sebanyak 2,500 lebih set barangan keperluan diserahkan di kawasan Dewan Undangan Negeri Kinrara. Foto Sumber: Facebook Ng Sze Han
SELANGOR

பிகேபி: ஏழைகளுக்கு கோவிட்-19 சிறப்பு உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 11:

நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் மாநிலத்தில் தற்போது கிடைத்து வரும்  உணவு  பொருட்கள் உதவிகள் மிகவும் தேவைப்படும் ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் வசதி படைத்தவர்கள் இந்த சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என கின்ராரா சட்ட மன்ற உறுப்பினர் எங் ஸீ ஹான் வலியுறுத்தினார். பிகேபி நடவடிக்கை தொடங்கிய முதல் பொருட்கள் விநியோகம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடைய மற்றவர்கள் வழிவிட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” இந்த நேரத்தில் வசதியான பொது மக்கள் ஏழைகளுக்கு வழிவிட்டு பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். பிகேபி காலகெடு ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட்டதால் உணவு பொருட்கள் குறைவாகவே உள்ளது. ஆகவே, ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது, பிகேபி தொடங்கியது முதல் கின்ராரா சட்ட மன்ற தொகுதியில் 2,500 குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது, ” என்று தமது அகப்பக்கத்தில் எங் ஸீ ஹான் பதிவு செய்துள்ளார்.


Pengarang :