Gambar Dr. Samsu Foto Twitter Erika Syamim Samsu Ambia
NATIONAL

பிகேபி நீடிக்கப்பட்டுள்ளது; பல்கலைக் கழக மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப் படுவார்களா ?

புத்ராஜெயா, ஏப்ரல் 11:

நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர்க்கல்வி மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கான சிறந்த வழியை இன்றைய சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஆராயும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ நோரைனி அகாமட் தெரிவித்தார்.

மார்ச் 18 ஆம் தேதி பிகேபி நடைமுறை அமல்படுத்துவதற்கு முன்பு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் டிக்கெட் வாங்குவதற்காக பேருந்து நிலையங்களையும், வீடு திரும்புவதற்கான ஆவணங்களை பெற காவல் நிலையங்களையும் முற்றுகையிட்டனர். நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்ற உறுதியற்ற  நிலையில், உயர்க்கல்விக் கூடங்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்ற வேண்டுகோள் உள்ளது.

இதற்கு முன் தேசிய மாணவர் ஆலோசனைக் குழு மாணவர்கள் கட்டம் கட்டமாக வீடு திரும்ப அனுமதிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது. சபா மற்றும் சரவாக்கில் இருந்து திரும்ப வேண்டிய மாணவர்களுக்கு சிறப்பு விமானங்களை வாடகைக்கு அமர்த்தவும் அரசாங்கத்தை கேட்டுள்ளது


Pengarang :