SELANGOR

மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தெற்கு கிள்ளானில் 6 சாலைகள் அடைக்கப்பட்டது !!!

ஷா ஆலம், ஏப்ரல் 18:

நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) மூன்றாம் கட்டத்தில் இருப்பதை தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை குறைக்க ஆறு முக்கிய சாலைகளை மூடுவதாக தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை அலுவலகம் தமது அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையில் ராஜா நாலா மேம்பாலம், முசைடின் மேம்பாலம், சுங்கை சீரே சாலை, கம்போங் ராஜா மூடா மேம்பாலம், ராஜா ஜைனால் சாலை மற்றும் பெசி மேம்பாலம் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 சங்கிலி தொடரை அறுக்கும் முயற்சியில் மக்களின் நடமாட்டத்தை குறைக்க இது துணை புரியும் என காவல்துறை எதிர்ப்பார்க்கிறது.

” பொது மக்கள் தேவைப்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும். பிகேபி நடவடிக்கையை மீறுபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்,” என்று தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே மாவட்ட காவல்துறை குற்றவியல் பிரிவின் அதிரடிப்படை நடமாடும் கட்டுப்பாடு ஆணையை மீறிய 18 நபர்களை பூலாவ் இண்டா, போர்ட் கிள்ளான் மற்றும் புக்கிட் திங்கி ஆகிய இடங்களில் கைது செய்தது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Pengarang :