Nyahkuman dilakukan kepada petugas dan kenderaan terlibat selepas selesai menjalankan Saringan Komuniti Covid-19 hasil inisiatif Kerajaan Negeri bersama Klinik Selcare dan dipantau oleh Pejabat Kesihatan Daerah dilakukan di Seksyen 7, Shah Alam pada 18 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
SELANGOR

மற்ற மாநிலங்கள் சிலாங்கூரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்

ஷா ஆலம், ஏப்ரல் 19:

சிலாங்கூர் மாநிலம் கோவிட்-19 நோய் பரவலை தடுக்கும் முயற்சியாக சமூக பரிசோதனை நடவடிக்கையை முடுக்கி இருக்கும் நடைமுறையை மலேசியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று பொது சுகாதார மருத்துவ நிபுணர் அமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் ஜைனால் அரீப்பீன் ஓமார் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 11 தொடங்கிய இந்த சமூக பரிசோதனை புதிய பலன்களை அடைய வழி வகுக்கும் என்றும் சுகாதார அமைச்சின் சுமையை குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநில அரசாங்கங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் தனியார் நிறுவனங்களின் துணையோடு இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். மலேசியா முழுமையாக இப்படி போன்ற பெரிய அளவில் சமூக பரிசோதனைகள் நடத்தப்பட்டால் கோவிட்-19 நோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைக்கு மிகப் பெரிய வெற்றியை நாம் பெற முடியும் என்று உறுதி அளித்தார்.


Pengarang :