SELANGOR

கிள்ளானில் சாலைத் தடுப்பு அதிகரிக்கப்படும்! – காவல் துறை

ஷா ஆலம், ஏப்.24-

நடமாட்ட கட்டுப்பாடு காலத்தில் ரமலான் கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயலும் நபர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக இவ்வட்டாரத்தில் சாலைத் தடுப்புகள் அதிகரிக்கப்படும் என்று கிள்ளான் செலாத்தான் காவல் துறை அறிவித்தது.

“சமூக நலன் மற்றும் அவசர காரணங்களுக்காக எல்லைல் லடப்பதற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்படுவர்” என்று அது கூறியது. ஏப்ரல் 28ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் மூன்றாம் கட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணைக்கு ஏற்ப அனைத்து சாலைத் தடுப்பு நடவடிக்கைகளும் தொடரும். கிள்ளான் நகரத்தில் அவசியமற்ற சாலை போக்குவரத்துகளை கட்டுப்படுத்த சாலைத் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது தெரிவித்தது.

தங்கள் சொந்த ஊர்களில் ரமலான் கொண்டாடும் நோக்கத்திலான எந்தவொரு நடமாட்டத்தையும் காவல் துறை இதுவரை அனுமதிக்கவில்லை என்று அது தெளிவுப்படுத்தியது. நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை காலம் மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டு மே 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று நேற்று பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் அறிவித்தார்.:


Pengarang :