Keadaan ketika operasi sekatan jalan raya dilakukan oleh anggota polis bersama tentera untuk Kawalan Perintah Pergerakan di Lebuhraya Persekutuan menghala ke Shah Alam pada 7 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONAL

பிகேபியை தளர்த்த நடவடிக்கை , பகுதி வாரியாக நடைமுறைகளை எம்கெஎன் வரையறுக்கும்

புத்ராஜெயா, ஏப்ரல் 24:

தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கெஎன்) பகுதி வாரியாக அமல்படுத்தும் நடைமுறைகளை (எஸ்ஒபி) ஏற்படுத்த இருக்கிறது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். எஸ்ஒபிகள் பகுதி வாரியாக சிவப்பு பகுதி, மஞ்சள் பகுதி மற்றும் பச்சை என மாறுபட்ட நிலையில் இருக்கும் என்றும் சுகாதார அமைச்சு மற்றும் காவல்துறையின் ஆலோசனையை பின்பற்றி நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” பகுதி வாரியாக நடைமுறைகள், பகுதிகளுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிமுறைகள், மேலும் பகுதிக்கான எல்லையை பாதுகாக்க வேண்டும். சிவப்பு பகுதிகளில் இருந்து பச்சை பகுதிகளுக்கு யாரும் நுழையக் கூடாது. கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டால், எவ்வளவு தூரத்திற்கு அவை தளர்த்தப்பட்டது என்று தெரிய வேண்டும்.அதனால் தான், சுகாதார அமைச்சு மற்றும் காவல்துறை ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி சரியான வழிமுறைகளை ஒவ்வொரு பகுதிகளுக்கும் வெளியாக்க வேண்டும்,” என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு இஸ்மாயில் சப்ரி பேசினார்.


Pengarang :