PUTRAJAYA, 21 April — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah semasa hadir ke sidang media harian berkaitan jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini. Sebanyak 57 kes baharu positif COVID-19 dilaporkan setakat tengah hari tadi, sekali gus menjadikan jumlah kumulatif kes yang positif di negara ini sebanyak 5,482 kes dan terdapat 3 kes kematian akibat jangkitan itu direkodkan hari ini dengan jumlah kumulatif kematian sebanyak 92 kes. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

கோவிட்-19 நோய் பாதிப்பில்லாத பகுதி மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள்;பிகேபியை கடைபிடிக்க வேண்டும் !!!

புத்ராஜெயா, ஏப்ரல் 25:

பச்சை மண்டலத்தில் இருக்கும் பொது மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் கோவிட்-19 நோய் சம்பவங்கள் இல்லை என்று அலட்சியமாக நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாமல் இருக்கும் அணுகுமுறையைக் கண்டு  மலேசிய சுகாதார அமைச்சு கவலை கொள்வதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். பொது மக்களில் பலர் கோவிட்-19 தொற்று நோய் தாக்குதல் நின்று விட்டது போன்ற தோற்றத்தில் உள்ளனர், ஆனால் இன்னும் இந்நோய் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருவதாகவும், இறுதி வரை போராட வேண்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” ஆகவே, பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதி மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள். நடமாடும் கட்டுப்பாடு ஆணையை பின்பற்றி நடக்க வேண்டும். சுகாதார அமைச்சு அனைத்து பொது மக்களையும் கோவிட்-19 தொற்று நோயை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். இந்த வைரஸ் நாம் அனைவரின் எதிரி ஆகும், இருந்தாலும் நாம் தொடர்ந்து அலட்சியமாக இருந்தால் கோவிட்-19 தாக்கத்தை நாம் எதிர் கொள்ள முடியாது,” என்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :