祖华丽雅服务中心职员把蔬果分配给选区的贫户。
SELANGOR

சட்ட மன்ற உறுப்பினர் விவசாயிகளின் விளைபொருட்களை வாங்கி ஏழைகளுக்கு வழங்கினார் !!!

கோலா சிலாங்கூர், ஏப்ரல் 27:

நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு வரும் பொது மக்களுக்கு கோலா சிலாங்கூர் வட்டாரத்தில் விவசாயம் செய்து வரும் தரப்பினரின் விளைபொருட்களை புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற உறுப்பினர் வாங்கி வழங்கினார். அதன் சட்ட மன்ற உறுப்பினர் ஜூவாரியா ஸூல்கிப்லி கூறுகையில், சம்பந்தப்பட்ட விவசாயிகள் பிகேபி நடவடிக்கையை தொடர்ந்து தங்களது விவசாய விளைபொருட்களை மொத்த வியாபார  சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்றார். ஆகவே, இந்த விளைபொருட்களை வாங்கி தமது சட்ட மன்றத்தில் மிகவும் வலிந்த மக்களுக்கு வழங்கியதாக பெருமிதம் கொண்டார்.

” விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை மொத்த வியாபார சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் பொருட்களின் அளவு அதிகரித்து, விற்கும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதன் தாக்கத்தை குறைக்கவே நாங்கள் இந்த முயற்சியில் இறங்கினோம். மரவள்ளி கிழங்கு 100 கிலோ, வெண்டைக்காய் 30 கிலோ மற்றும் பயிற்றங்காய் 30 கிலோ ஆகியவற்றை கம்போங் தஞ்சோங் கெராமாட் மக்களுக்கு வழங்கினோம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு ஜூவாரியா  தெரிவித்தார்.


Pengarang :