Haniza (kanan) bersama Abd Hamid (tengah) mengadakan lawatan tapak ke Taman Ampang Saujana bagi menyelesaikan kejadian banjir lumpur, di situ. Foto FB Haniza Talha
SELANGOR

சகதி வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண நீரோட்ட பாதை நிர்மாணிக்கப்படும்! – எம்பிஏஜே

ஷா ஆலம், மே 1-

அம்பாங், தாமான் அம்பாங் சவுஜானா பகுதியில் சகதி வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க அருகாமையில் உள்ள மலையில் நீராட்ட பாதை ஒன்றை சிலாங்கூர் வன இலாகாவும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகவும் இணைந்து நிர்மாணிக்க உள்ளன என்று வீடமைப்பு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிசா தால்ஹா கூறினார்.
நீர் பாசன வடிகாலில் நீரோட்டம் பெருகி முறையாகப் பேணப்படாத கால்வாய்க்கு செலவதே வெள்ளம் ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணம் இருப்பதால் சம்பந்தப்பட்ட மழை நீர் ஓடுவதற்காகவே இந்த நீரோட்ட பாதை நிர்மாணிக்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

கடந்த சில நாட்களாக இங்கு கடும் மழை தொடந்து பெய்து வருவதன் காரணமாக அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதாக இங்குள்ள வீடமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் புகார் கிடைத்தாக அவர் சொன்னார்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் நேற்று தாமும் எம்பிஏஜே தலைவர் டத்தோ அப்துல் ஹாமிட் அப்ப்குதிக்கு வருகை புரிந்ததாக ஹானிசா தெரிவித்தார்.
இத்னிடையே, நீரோட்டதை எளிமை படுத்தும் வகையில் கால்வாய்களை சுத்தம் செய்யும்படி சம்பந்தப்பட்ட தரப்பை தாம் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.


Pengarang :