NATIONAL

கோவிட்-19: நாடாளுமன்றம் ஒரு நாள் மட்டுமே கூட வேண்டும்- சட்ட அமைச்சர்

கோலாலம்பூர், மே 3:

கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றம் ஒரு நாள் மட்டுமே நடைபெற வேண்டும் என்று பிரதமர்துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் டத்தோ தாகியுடின் ஹசான் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் எந்தவொரு பொதுக்கூட்டமும் பொருத்தமானதல்ல என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவை அவர் இன்று ஒரு அறிக்கையில் விளக்கினார்.

அதன்படி, மக்களவையில்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையும் சமூக இடைவெளி அமல்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும். “இது சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) நோக்கத்தில் சபையின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்வதாகும்” என்று அவர் கூறினார்.

கோவிட் -19 நோய் பரவலை தொடர்ந்து தனிநபர்கள், வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளைத் தொடர்ந்து, ஜூலை மாதம் வரவிருக்கும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல பொருத்தமான மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.


Pengarang :