NATIONAL

அடகுக் கடையில் மக்கள் கூட்டம், மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், மே 5:

நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபிபி) முதல் நாளில் அடகுக்கடையில் அதிகமாக திரண்ட பொது மக்களின் நடவடிக்கை தற்போது பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமான முறையில் உள்ளதை காட்டுகிறது என்று மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். ஆகவே, மத்திய அரசாங்கம் நாட்டின்  பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் கோவிட்-19 நோய் பரவியதால் நாட்டு மக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என அன்வார் தெரிவித்தார்.

” நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) செயல்படுத்தி ஒரு மாதம் மற்றுமே ஆகிறது. ஆனாலும், பி40 வர்கத்தினர் மட்டுமின்றி எம்40 வர்கத்தினரும் வரிசை நின்ற காட்சி நாட்டின் உண்மை நிலவரத்தை காட்டுகிறது. இது மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. ஆகவே, நமது நாட்டின் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்யும் காலம் பிறக்கும்,” என்று தமது முகநூலில் பதிவு செய்தார்.


Pengarang :