Keadaan trafik di waktu puncak di Jalan Ampang, Ampang selepas kerajaan membenarkan beberapa sektor ekonomi beroperasi berikutan pelaksanaan Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB) ketika tinjauan SelangorKini pada 6 Mei 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

மலேசியாவில் நுழைய வெளிநாட்டவர்களுக்கு தடை – இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, மே 6:

நாட்டிற்கு நுழைய அனைத்து வழிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். விமான நிலையங்கள் உட்பட மலேசியாவிற்குள் வெளிநாட்டினரை அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையை அரசாங்கம் இன்னும் கடைப்பிடிக்கிறது . ஏர் ஏசியா உள்ளிட்ட விமான சேவைகள் மலேசிய குடிமக்களை அழைத்து வர மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

“நாங்கள் இன்னும் வெளிநாட்டினர்களை நம் நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. நான் ஏர் ஏசியாவுடன் பேசினேன், அவர்கள் இல்லை என்று சொன்னார்கள்.அப்படி ஏதாவது இருந்தால், குடிமக்கள் அல்லாதவர்களை உள்ளே நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.அவர்கள் அழைத்து வரக்கூடியது மலேசிய குடிமக்களை மட்டுமே. நுழைந்தவுடன், அவர்கள் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.ஏர் ஏசியா அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு இணங்க வேண்டும்” என்று தினசரி நடத்தப்படும் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு இஸ்மாயில் சப்ரி கூறினார்.


Pengarang :