Lebuhraya Persekutuan dipenuhi kenderaan pada kedua arah pada sebelah petang di waktu pengguna lebuh raya itu pulang ke rumah selepas tamat waktu bekerja pada 5 Mei 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONAL

பிளஸ் ஓய்வெடுக்கும் மையங்கள் நாளை தொடங்கி 4 நாட்களுக்கு மூடப்படும்

புத்ராஜெயா, மே 6:

கோவிட்-19 பாதிப்பை எதிர்க்கொள்ள அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் நிபந்தனைக்குட்பட்ட  நடமாடும் கட்டுபாடு ஆணையின் (பிகேபிபி) கீழ் மாநிலம் விட்டு வெளியே செல்லும் பொது மக்கள் நிர்ணயத்த நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். உணவகங்கள் மற்றும் சூராவ் உள்ளிட்ட அனைத்து பிளாஸ் நெடுஞ்சாலைகளிலும் உள்ள ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் நாளை வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு பொது பயன்பாட்டிற்காக மூடப்பட்டுள்ளன. ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன என்றுஅவர் மேலும் தெரிவித்தார்.

“எனவே, நீண்ட தூரத்தில் பயணிப்பவர்கள் உணவுக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் தங்கள் சொந்த உணவைக் கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க முறைக்கு இணங்குவதை உறுதிசெய்ய அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் இருப்பார்கள். “என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு, ஓய்வு எடுக்க கார்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால், அவர்களது வாகனங்களில் மட்டுமே அவர்கள் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், நெடுஞ்சாலையில் உள்ள எண்ணெய் நிலையங்கள் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை திறக்கப்படும் என்று அவர் கூறினார்.


Pengarang :