NATIONAL

மே 18 நாடாளுமன்ற கூட்டத் தொடர், முஹீடின் தனது ஆதரவை நிரூபிக்கும் நாள் ?

ஷா ஆலம், மே 10:

மே 18 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றம் கூட்டத் தொடரில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்க பிரதமருக்கு இது ஒரு சோதனைக் களமாகும். பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றவர்  பாகோ எம்பி என்ற  நம்பிக்கையின் அடிப்படையில் டான் ஸ்ரீ முஹைதீன் யாசினை பிரதமராக  நியமனம் செய்தார்  மேன்மை தங்கிய மாமன்னர்  என்று கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

” ஆனால் அவரது (முஹீடின்) பெரும்பான்மை ஆதரவு எங்கே? அது பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும், எனவே இது முஹீடின் யாசீனுக்கு ஒரு சோதனை. இல்லையெனில், குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு வாதமும் அது (தேசிய கூட்டணி) ஒரு சதித்திட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட அரசாங்கம் என்ற கருத்துக்கு ஏற்புடையதாக  இருக்கும்” என்று டத்தோ ஸ்ரீ சைபுதீன் நாசுத்துயோன் இஸ்மாயில், நேற்று இரவு நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி ஃபட்ஸில் ‘மக்களின் ஆணையை மீட்டெடு’ என்ற தலைப்பில் பக்காத்தான் ஹாரப்பான் முகநூல்  ஒளிபரப்பு அமர்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேர நிகழ்ச்சியில் கெடா மந்திரி பெசாரும் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ முக்ரிஸ் மகாதிர், லுமுட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹட்டா ராம்லி மற்றும் டிஏபி தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் ஆகியோரும் கலந்து கொண்டனர். அனைத்து பக்காத்தான் எம்.பி.க்களும், பெர்சத்து கட்சியின் சில பிரதிநிதிகளும் நாடாளுமன்ற கூட்டத்தில் தங்களுக்கு வலுவான ஆதரவை வழங்க விரும்புவதாக சைபுதீன் கூறினார். “உண்மையில், மக்களின் விருப்பப்படி நாங்கள் மக்களிடைமே திருப்பித் தர முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூலிம் பண்டார் பாருவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சைபுடின் நசுத்துயோன் பேசினார்.


Pengarang :