PETALING JAYA, 10 Mei — Anggota tentera kelihatan berkawal setelah Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) di sekitar kawasan Pasar Jalan Othman hari ini. Kawasan itu menjadi kawasan terbaharu yang dilaksanakan PKPD berkuatkuasa hari ini.?Lokasi perintah PKPD kelapan ini melibatkan kira-kira 2,900 penghuni kediaman dan premis perniagaan di kawasan berkenaan. ?– fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA??
NATIONALSELANGOR

ஓத்மான் சாலை சந்தைப் பகுதியில் பிகேபிபி நடவடிக்கையை மாநில அரசு முன்மொழிந்தது

ஷா ஆலாம், மே 10:

மூன்று நாட்களுக்கு முன்பு மாநில அரசின் முன்மொழிவுகளைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா, ஓத்மான் சாலை சந்தையைச் சுற்றி நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பி.கே.பி.டி) இன்று அமல்படுத்தப்பட்டது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின்  கூறினார். சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றம் மூலம் இந்த திட்டம் மிக அதிகமாக கோவிட்-18 நோய் சம்பவங்கள் இருந்த இப்பகுதியில் அமல்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக, சிலாங்கூர் கோவிட் -19 நடவடிக்கை அறை, பெட்டாலிங் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகம், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) மற்றும் புக்கிட் கேசிங் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம் மூலம் இப்பகுதியில் பிகேபிடியை செயல்படுத்துவதை மாநில அரசு கண்காணிக்கும் என்றார். ” பிகேபிடியால் பாதிக்கப்பட்ட 2,900 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கல் தேவைகளைப் பொறுத்தவரை, மாநில அரசு இந்த செயல்பாட்டை ஒருங்கிணைத்து கண்காணிக்கும். பிகேபிடியை நடைமுறைப்படுத்துவது அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பும் அவசரமாக தேவைப்படுகிறது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :