Suasana di sekitar perumahan di Bandar Baru Selayang yang dikenakan Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) ketika tinjauan SelangorKini pada 29 April 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

கோவிட்-19 தொற்று நோயின் இரண்டாம் அலை தாக்கம்; மலேசியா கவலை கொள்கிறது- நூர் ஹிஸாம்

ஷா ஆலம், மே 12:

கோவிட் -19 நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நிச்சயமாக பல நாடுகளுக்கு கவலை அளிக்கிறது, மலேசியாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்று தலைமை சுகாதார இயக்குனர் தெரிவித்தார். இருப்பினும், ஒன்று முதல் நான்கு கட்டங்களிலும் நடமாடும்  கட்டுப்பாட்டுக் ஆணையை (பிகேபி) அமல்படுத்துவதன் மூலம் மலேசியாவின் முயற்சிகள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையை மூன்று முதல் இரண்டு இலக்கங்களாகக் குறைத்தன என்று டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“ஆம், கோவிட் -19 நோய்த்தொற்றின் இரண்டாவது அலை குறித்து பல நாடுகள் கவலை கொண்டுள்ளன, எனவே நாங்கள் அதைப் பற்றி கவலைப்படுகிறோம். ஆனால் இன்று முக்கியமானது என்னவென்றால், நாங்கள் (பிகேபி) ஒன்று முதல் நான்கு வரை செயல்படுத்தியுள்ளோம், மேலும் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், வழக்குகளின் எண்ணிக்கையை மூன்று இலக்கங்களிலிருந்து இரண்டாகக் குறைப்பதற்கும் வெற்றிபெற்ற செயல்பாட்டினை காணலாம். இன்று 16 சம்பவங்கள் பிகேபி காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு  மிகக் குறைவானவை ஆகும். அவற்றில் மூன்று இறக்குமதி சம்பவங்கள் மற்றும் 13 உள்நாட்டு சம்பவங்கள். இதில் ஒன்பது வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவர்கள் நான்கு பேர் உள்ளூர் வாசிகள் ஆகும். எனவே நாங்கள் இதுவரை செய்த நடவடிக்கை மிகவும் நல்ல பலனை தந்துள்ளது,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் கோவிட் -19 இல் தினசரி ஊடக சந்திப்பில் பேசினார். கோவிட்-19


Pengarang :