Najwan Halimi berucap dalam Majlis Penyampaian Sijil The Malaysia Book of Records sempena kejayaan Program Penyertaan Terbesar Taska Dalam Latihan Keselamatan Elektrik, Keselamatan Kebakaran Dan Pertolongan Cemas di Universiti Teknologi MARA, Shah Alam pada 23 Oktober 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

பிகேபி காலகட்டத்தில் இளையோர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர், மாநில அரசாங்கம் உதவ வேண்டும் !!!

ஷா ஆலம், மே 13:

வரவிருக்கும் பொருளாதார ஊக்கத் திட்டத்தில் இளைஞர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துமாறு மாநில அரசு வலியுறுத்தப்படுகிறது என்று கோத்தா  அங்கிரிக் மாநில சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மார்ச் 18 முதல் நடமாடும்  கட்டுப்பாட்டு  ஆணையை (பிகேபி) அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த வர்கத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதே இதற்குக் காரணம் என்று நஜ்வான் ஹலிமி கூறினார். கோவிட் -19 தொற்று நோயின் தாக்கத்தினால் பல இளைஞர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வேலையில்லாமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஏனெனில் முதலாளிகள் அதிக அனுபவம் வாய்ந்தவர்களாக கருதப்படும் வயதான தொழிலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

” பொருளாதார ஊக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், பாதிக்கப்பட்ட இளையோர் அதிக கவனம் செலுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இன்று ” பாக்யா செண்டோல்” கலந்துரையாடலில் பேசிய போது இவ்வாறு நஜ்வான் கூறினார். தொற்றுநோயைத் தொடர்ந்து, பல இளைஞர்கள் திறமையான மற்றும் நன்கு படித்த நபர்களாக இருந்தபோதிலும் தங்கள் வருமான ஆதாரத்தை இழந்திருப்பதாக புகார் கூறியதாக நஜ்வான் கூறினார்.

“கிரேப் சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொள்வது போன்ற வருவாயை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை அவர்கள் தேட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். நேர்மையான வழியில்  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் எந்த வேலையும் முயற்சிக்கலாம். பலர் புகார் செய்தாலும், அதை கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும். பிகேபிக்குப் பிறகு, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இந்த தரப்பினருக்கு உதவவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் , ”என்று அவர் கூறினார்.


Pengarang :