Majlis Bandaraya Shah Alam
SELANGOR

எம்பிஎஸ்ஏ, ஜெகெல் நிறுவனத்தின் கூடாரத்தை இடித்துத் தள்ளியது

ஷா ஆலம், மே 13:

ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) இன்று செக்சன் 7 இல் சட்ட விரோதமாக  அமைக்கப்பட்டுள்ள  ஜெகெல் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான கூடாரத்தை இடித்தது என்று அதன் பொது தொடர்பு மற்றும் கார்ப்பரேட் பிரிவின் தலைவர் தெரிவித்தார். மார்ச் மாதத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்ட போதிலும் ஜெகெல் நிறுவனம் இந்த உத்தரவை பின்பற்றத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஷாரின் அகமது தெரிவித்தார்.

” எம்பிஎஸ்ஏ-விடம் இருந்து தற்காலிக கூடார உரிமத்திற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும், ஆனால் ஜெகெல் உரிிமையாளர்  அவ்வாறு செய்யத் தவறிவிட்டார். அருகிலுள்ள துணை மின் நிலையங்களிலிருந்து கூடாரங்களுக்கு மின்சாரம்  வழங்கப்படுவதற்கும் தெனகா நேஷனல் பெர்ஹாட்டின் அனுமதி பெறவில்லை. அது உண்மையில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமா” என்று அவர் இன்று சிலாங்கூர் இன்றுக்கு  கூறினார்.

ரமலனுக்கு  முன்பு கூடாரம் இடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஷாரின் கூறினார். எம்பிஎஸ்ஏ தனது முகநூலில்  மூலம் இன்று இடித்து தள்ளிய செயல்பாடுகளை பதிவேற்றியது.


Pengarang :