SELANGOR

மந்திரி பெசார்: பகாங் மற்றும் கோலா லம்பூர் மாநில மக்களும் செலாங்கா செயலியை பயன்படுத்துகிறார்கள் !!!

ஷா ஆலம், மே 15:

கோவிட்-19 தொற்று நோயை கண்டறிய சிலாங்கூர் அரசு உருவாக்கிய செலங்கா செயலி (நுழையும் போது பாதுகாப்பான வழி) மற்ற மாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாக மாநில மந்திரி பெசார் தெரிவித்தார். கோலாலம்பூர், பகாங் மற்றும் பல மாநிலங்களில் வசிப்பவர்கள் இந்த செயலியை பயன்படுத்தி உள்ளனர். மே 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி கூறினார்.

” செலங்கா-ஐ ஒரு பிரத்யேக உரிமையாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட நபர்களின் தரவைக் கண்டறிய சுகாதார அமைச்சிற்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர்  கோவிட் -19-க்கு பிறகு என்ற முகநூல் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்:  சிலாங்கூருக்கு வெளியே கிளைகளைக் கொண்ட பிரபலமான நெட்வொர்க் கடைகளும் 7-லெவன், அல்-இக்சன் ஸ்போர்ட்ஸ், ஜையண்ட் ஹைப்பர் மார்க்கெட், ஜேஎம் பெரியானா ஹவுஸ், எஃப் அண்ட் என் கோகோ கோலா , காபி பீன் & டீ லீவ்ஸ், எஸ்பி செத்தியா, சில்லீஸ் ஆகிய நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்,” என்று கூறினார்.

கொரியா, தைவான் உள்ளிட்ட பிற நாடுகளிலும் இதுபோன்ற பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன, ஆனால் செலாங்கா  பயன்பாடு மிகவும் எளிதானது என்றும் அமிருதீன் விளக்கினார். “கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், கோவிட் -19 தொற்று இருந்தால் நாங்கள் தனிநபரைக் கண்காணிக்க முடியும்,” என்று அவர் கூறினார். தொழில்நுட்பம் மற்றும் பொது சுகாதார கண்டறிதல் துறையில் நிபுணத்துவம் பெற்ற சிலாங்கூர் கோவிட் -19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்டிஎஃப்சி) உறுப்பினர் டாக்டர் ஹெல்மி ஜகாரியாவின் சிந்தனையே இது என்று அவர் கூறினார்.

வளாகத்தின் உரிமையாளர் QR குறியீட்டை ஒரு படி portal.mbiselangor.com.my அல்லது step.my மூலம் மட்டுமே அச்சிட்டு பார்வையாளர்கள் குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது காண்பிக்க வேண்டும்.


Pengarang :