NATIONALSELANGOR

பெடுலி சேஹாட் திட்டம் மேம்படுத்தப் பட்டுள்ளது; ரிம 42.5 மில்லியன் ஒதுக்கீடு- மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 15:

சிலாங்கூர் மாநில சுகாதார திட்டமான பெடுலி சேஹாட் திட்டத்தை மேலும் திறம்படுத்த ரிம 42.5 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தை எதிர் கொள்ள இது உறுதுணையாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற சிலாங்கூர் பரிவுமிக்க ஊக்குவிப்பு 2.0 திட்டத்தின் அடைவுநிலை குறித்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

” பெடுலி சேஹாட் சுகாதார அட்டை கொண்டிருப்பவர்களுக்கு விபத்து இறப்பு நிதியாக ரிம 5,000. இறுதி சடங்குகளுக்கு ரிம 1,000,  மிகவும் சிக்கலான நோயாளிகளுக்கு ரிம 5,000 மற்றும் இயற்கை மரணத்திற்கு ரிம 2,000,” என்று அமிருடின் ஷாரி விவரித்தார்.

செல்கேர் நிறுவனத்தின் மூலம் சிவப்பு மண்டல பகுதிகளில் கோவிட்-19 நோய் பரிசோதனை நடத்தப்பட்டது எனவும் மொத்தம் 5,433 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார். இதில் 10 பேர்களுக்கு கோவிட்-19 நோய் உறுதிப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :