Keadaan di Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur (KLIA) pada 10 Mac lalu yang dilihat agak lengang dan sunyi berikutan kurangnya para penumpang akibat penularan wabak Covid-19 di seluruh dunia.- Foto BERNAMA
NATIONAL

கோவிட்-19 நோய் சம்பவ எண்ணிக்கை ஒரு இலக்கமாக தொடர்ந்தால் நாட்டின் எல்லைகள் திறக்கப்படும்

ஷா ஆலம், ஜூன் 8:

மலேசியாவில் கோவிட் -19 மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபிபி) கீழ் சம்பவ எண்ணிக்கை ஒரு இலக்கமாக இருந்தால் நாட்டின் எல்லைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை பரிந்துரை செய்யப்படும் என சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். பல துறைகளை அரசாங்கம் அதிக தளர்வுகளை  வழங்கிய பின்னர் மீட்பு நிலையை கண்காணிக்கப்படும் என்றார்.

” உள்நாட்டு சம்பவங்கள் கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நாடு பசுமை மண்டல அடைவுநிலையில் இருந்தால் ‘கிரீன் பப்பல்’ என்ற அடிப்படையில் சர்வதேச எல்லைகளைத் திறப்பதை நாங்கள் கருத்தில் கொள்வோம். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான சீரான செயலாக்க  நடைமுறைகளை (எஸ்ஓபி) முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.

” எல்லைக் கட்டுப்பாட்டு கதவைத் திறப்பதற்கு முன், இந்த கருத்தை கொண்டு வருவதற்கு வெளிநாடுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஒரு எஸ்ஓபி  செயல்படுத்தும் அளவுகோல் இருந்தால், நாங்கள் அதை செயல்படுத்த முடியும் (எல்லைக் கதவைத் திறக்கவும்) ஆனால் அது பேச்சுவார்த்தை மற்றும் இரு நாடுகளின் ஒப்பந்தத்தையும் பொறுத்தது” என்று அவர் கூறினார். பிகேபிபி ஜூன் 10 ஆம் தேதி தொடங்குகிறது, இது பிகேபிடி அமல்படுத்தப்பட்டப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் அமலாாக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :