Pekerja pusat boling Super Bowl menyembur cecair nyah kuman pada kerusi ketika membuat Prosedur Operasi Standart (SOP) Perintah Kawalan Pergerakan Pemulihan (PKPP) yang telah ditetapkan sebelum dibenarkan beroperasi sebagai langkah bagi mengekang penularan COVID-19 ketika tinjauan di Seksyen 18 Shah Alam pada 11 JUN 2020. Foto REMY ARIFIN/SELANGORkINI
SELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து பயணிகள் செலாங்கா செயலியை பயன்படுத்த வேண்டும் !!!

ஷா ஆலம், ஜூன் 11:

சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து பயணிகள் சேவையைப் பயன்படுத்துவதற்கு முன்பு பேருந்தின் நுழைவாயிலில் செலாங்கா  கியூஆர்  (பாதுகாப்பாக அடி எடுத்து வைப்போம்) ஸ்கேன் செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்ற  ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான்  தெரிவித்துள்ளார். கோவிட் -19 பரவுவதைத் தடுக்க பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது பயணிகள்  வரிசையில் இருக்கும்போது பொறுமையாக இருக்கவும், சீரான செயலாக்க  நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) பின்பற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

” பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரே நேரத்தில் 20 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்றன, எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டும், பேருந்துகள் விரைந்து செல்லக்கூடாது. சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து சேவையைப் பயன்படுத்தும் போது சமூக இடைவெளி, முகமூடி அணிதல் மற்றும் சுகாதாரத்தை பராமரிக்கவும் பயணிகள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்,” என்று அவர் சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

கிருமி நாசினி தெளிக்கப்படும் நடவடிக்கை  எப்போதும் கால அட்டவணையில் இருப்பதால் சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து  பயனர்கள் சேவையைப் பயன்படுத்துவது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று ஸீ ஹான் கூறினார். கடந்த மார்ச் 24-இல், சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து  சேவையில் 43 பாதைகளில் 138 பேருந்துகள் ஈடுபட்டன.


Pengarang :