Azmi Md Rejab, 57, (kiri) yang juga OKU cacat penglihatan mengurut tapak kaki pelanggan di pusat urutan tradisional dan refleksologi miliknya di Pekan Baling hari ini.
SELANGOR

மூத்த குடிமக்களுக்கு ரிம 3,000 வெகுமதி – யாவாஸ் மறுப்பு

ஷா ஆலம், ஜூன் 11:

மூத்த குடிமக்கள் நலத் திட்டத்தின் (SMUE) உறுப்பினர்களுக்கு ரிம 3,000 ரொக்கமாக வழங்குவதாக வெளியான செய்தியை சிலாங்கூர் குழந்தைகள் பாரம்பரிய அறக்கட்டளை (யாவாஸ்) இன்று மறுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில்  பிறந்த மாதத்தில் இந்த திட்டத்திற்கு ரிம 100 ஜோம் சொப்பிங் பற்றுச்சீட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று  யவாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

” இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளது. இது உண்மையல்ல. போலி செய்திகளால் ஏமாறக்கூடாது, என்பதற்காக சரியான தகவல்களைப் பெற அதன் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்  படுகிறார்கள்” என்று ஒரு அறிக்கையில் யாவாஸ் தெரிவித்துள்ளது. எந்தவொரு நன்மைகளையும் இழக்காத வண்ணம்  தொலைபேசி எண்களை சரி செய்து கொள்ள வேண்டும்என அனைத்து உறுப்பினர்களையும் யவாஸ் நினைவுபடுத்துகிறது. ஜோம் ஷாப்பிங் மற்றும் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டங்கள் உள்ளிட்ட சலுகைகளை மேம்படுத்துவதற்கு மந்திரி பெசார் பெறுநிறுவனத்தின் கீழ் யாவாஸ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Pengarang :