PUTRAJAYA, 5 Jun — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah ketika sidang media harian perkembangan terkini COVID-19 di Kementerian Kesihatan hari ini. Sebanyak 19 kes baharu positif COVID-19 dilaporkan setakat hari ini, sekali gus menjadikan jumlah kumulatif kes yang positif di negara ini sebanyak 8,266 kes manakala sebanyak 51 kes telah sembuh dan terdapat satu kes kematian akibat jangkitan itu direkodkan hari ini dengan jumlah kumulatif kematian sebanyak 116 kes. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

13,149 பேர்களுக்கு, குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமில் கோவிட்-19 பரிசோதனை !!!

புத்ராஜெயா, ஜூன் 18:

13,149 குடிநுழைவுத் துறையின் தடுப்பு மையங்களின் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட கொவிட்-19 நோய்க்கான மருத்துவ பரிசோதனையில் 782 பேருக்கு அந்நோய் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதில், 775 பேர் மலேசியர்கள் அல்லாதவர்கள் என்றும் எஞ்சிய எழுவர் மலேசியர்களும் என்றும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறியிருக்கிறார்.

இதுவரை, 803 பேர் ஆய்வக முடிவிற்காக காத்திருப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 நோய் கைதிகளிடையே அதிகம் பரவத் தொடங்கியதால், தற்போது அந்நோய் பரவலுக்கு மிகவும் ஆபத்தான இடமாக குடிநுழைவுத் துறையின் தடுப்பு மையங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

–பெர்னாமா


Pengarang :