NATIONAL

அந்நிய நாட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி- இஸ்மாயில் சப்ரி

மருத்துவச் சிகிச்சையை பெறுவதற்காக மட்டுமே அந்நிய நாட்டவர்கள் மலேசியாவிற்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லது உயர் சார்பு பிரிவில் இருக்கும், நோயாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  தெரிவித்தார்.
புற்றுநோய், இருதய நோய் மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ள வெளிநாட்டினர்களுக்கு , ஐபி (IB) எனும் முதல் கட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.

மலேசியா சுகாதார சுற்றுலா மன்றத்துடன் பதிவு பெற்ற மருத்துவமனைகளில் இருந்து அனுமதி கடிதத்தை வெளிநாட்டினர் முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும்.
முதலாம் கட்ட அனுமதியில், விமானம் வழியாக மலேசியாவிற்கு பயணிக்கவும்,  உடன் ஒரு பாதுகாவலரை அழைத்து வருவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது.
12 வயதிற்கு உட்பட்ட நோயாளிகளுக்கு மட்டும், இரண்டு பாதுகாவலர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பாதுகாவலர் சிகிச்சையின் போது நோயாளியுடன் அதே அறையில் இருக்க வேண்டும்.

மலேசியாவிற்கு சிகிச்சை பெற வரும் வெளிநாட்டினர், நாட்டின் எல்லைக்குள் நுழைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கொவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும் மற்றும் மருத்துவ செலவுகள் உட்பட முன்நுழைவிற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்திருப்பதோடு மைசெஜாத்ரா  செயலியும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.


Pengarang :