NATIONAL

கோவிட்-19: மக்கள் சுய கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் !!!

புத்ராஜெயா, ஜூன் 26:

கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் தாக்கத்தை முற்றாக ஒழிப்பதற்கும் இதிலிருந்து விடுபடவும் மக்கள் சுய கட்டுப்பாட்டுக்கான தங்கள் உறுதிப்பாட்டை தொடர்ந்து மேலோங்கச் செய்ய வேண்டும். நடமாடும் கட்டுபாட்டு ஆணை (பிகேபி) அமல்படுத்தப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்திருந்தாலும் செயல்பாட்டு தர விதிமுறையை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இதில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் சுத்தத்தைப் பேணுவதும் இத்தொற்றிலிருந்து விடுபட சிறந்த தடுப்பு மருந்தாக அமையும்.

இந்த சமயத்தில் அரசாங்கம் ஏராளமான  தளர்வுகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.  அதே வேளையில் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது. எனினும், இந்தத் தொற்றுப் பரவல் இன்னும் முற்றாக நிறுத்தப்படாததால் மக்கள் எந்நேரமும் விழிப்போடு செயல்படுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

நாடு மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பி வருகிறது. நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு சில தளர்வுகளுடன் மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவாக பின்பற்றப்பட்டு வருகிறது. மக்கள் அறிவுரைகளையும் செயல்பாட்டு தர விதிமுறையையும் முறையாகப் பின்பற்றியதே இந்த வெற்றிக்கு காரணமாகும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :