புத்தரா ஜெயாவில் நடைபெற்ற 2020 சுதந்திரத் தின கொண்டாடத்தில் மாமன்னர் கலந்துக்கொண்ட பொழுது.
NATIONAL

புதிய இயல்புடன் 2020 தேசியத் தினக் கொண்டாட்டம்

 

புத்தரா ஜெயாவில் நடைபெற்ற 2020 சுதந்திரத் தின கொண்டாடத்தில் மாமன்னர் கலந்துக்கொண்ட பொழுது.

 

புத்ரா ஜெயா, இவ்வாண்டின் தேசியத் தினம் இங்குள்ள தேசிய வீரர்கள் சதுக்கத்தில் புதிய இயல்பு நெறியுடன் கொண்டாடப்பட்டது. கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்த்து நாடு தொடர்ந்து போராடி வந்த போதிலும் இந்தத் தேசியத் தினக் கொண்டாட்டம் பொருள் பொதிந்த ஒன்றாகவும் நாட்டு பற்று உணர்வை மேலோங்க செய்யும் வகையிலும் அமைந்தது.

பரிவுமிக்க மலேசியா எனும் கருப்பொருளைக் கொண்ட இவ்வாண்டின் தேசியத் தினக் கொண்டாட்டத்திற்கு மிதமான அளவிலே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எஸ்.ஓ.பி. எனப்படும் சீரான செயலாக்க நடைமுறையைப் பின்பற்றும் வகையில் பிரமுகர்கள், பாதுகாப்பு படையினர், பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்நிகழ்வில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கோவிட்-19 நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் வருகையாளர்களின் உடல் உஷ்ணம் சோதிக்கப்பட்டதோடு மை செஜாத்ரா செயலி மூலம் அவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அனைவரும் முகக் கவசம் அணிவதும் உறுதி செய்யப்பட்டது. கூடல் இடைவெளியை உறுதி செய்வதற்கு ஏதுவாக ஒரு மீட்டர் இடைவெளியில் வருகையாளர்களுக்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

இந்த அரிய நிகழ்வை நேரில் காணும் வாய்ப்பு பொதுமக்களுக்கு இவ்வாண்டில் கிட்டாத போதிலும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அஞ்சல் செய்யப்பட்ட நேரடி ஒளிபரப்பைக் காணும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த 2020 தேசியத் தினக் கொண்டாட்டச் சிறப்பு நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாகப் போரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா தம்பதியர் கலந்து கொண்டனர்.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் மற்றும் அவரின் துணைவியார் புவான்ஸ்ரீ நோராய்னி அப்துல் ரஹ்மான் தொடர்பு மற்றும் பல்லுடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா, அவரின் துணைவியார் டத்தின் நோர்லின் சம்சுல் பாஹ்ரி ஆகியோர் பேரரசர் தம்பதியிரை வரவேற்றனர்.

ருக்குன் நெகாராவில் இடம் பெற்றுள்ள ஐந்து கோட்பாடுகள் இந்நாட்டிலுள் பல்லின மக்கள் அமைதியுடன் வாழ்வதற்கு அடித்தளமாக விளங்குவதாகப் பேரரசர் தமது உரையில் குறிப்பிட்டார்.

அந்தக் கோட்பாடுகள் அரசாங்கத் தலைவர்கள், அரசாங்கம் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அமைந்திருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :