SELANGOR

ரிசர்வ் நிலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் உடைப்பு பெட்டாலிங் நில அலுவலகம் நடவடிக்கை

ஷா ஆலம், செப் 3- டேசா  சுபாங் பெராந்தாவ் 2 ஆற்று ரிசர்வ் நிலத்தில் கட்டப்பட்ட 20 கட்டுமானங்களைப் பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலக அதிகாரிகள் அகற்றினர்.

சுங்கை பெலெப்பாஸ் ஆற்றில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்பு திட்டத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், லோட் பி எனப்படும் கட்டுமானம் உடைக்கப்படவில்லை. அதன் உரிமையாளரே பொருள்களை அகற்றுவதற்கு ஏதுவாக இரு வாரக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை 1965ஆம் ஆண்டு தேசிய நிலச் சட்டத்தின் 425வது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. லோட் பி பகுதியில் அனுமதியின்றி அரசாங்க நிலத்தில் கட்டப்பட்ட 45 கட்டுமானங்கள் உள்ளன.

சுங்கை பெலெப்பாஸ் வெள்ளத் தடுப்பு திட்டம் 1கோடியே 51 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அந்த ஆற்றின் 2.1 கிலோ மீட்டர் பகுதி தரம் உயர்த்தப்படும். இதன் வழி பெட்டாலிங் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என நம்பப்படுகிறது.


Pengarang :