SELANGOR

நீர் விநியோகத்தை உறுதி செய்ய 24 மணி நேர ஓரிட சேவை மையம்

ஷா ஆலம், செப் 4- நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் குடிநீர் விநியோக நிறுவனம் 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஓரிட மையத்தையும் பொது குழாய்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர லோரிகள் மூலமாகவும் பொது மக்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது. நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்தி நீரைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் டிவிட்டர் வழி தெரிவித்தது.

பெட்டாலிங் மாவட்டத்திற்கான ஓரிட சேவை மையங்கள் கீழ்க்கண்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கோத்தா டாமன்சாரா பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற மண்டபம். ஜாலான் நுரி, செக்சன் 7 சுங்கை பூலோ -(ஜாலான் குபு காஜா, தாமான் ஸ்ரீ பூலோ யு19-1ஏ) ஜாலான் 23, தாமான் புக்கிட் கூச்சாய்,, ஜாலான் பிஜேஎஸ் 1/3, பெட்டாலிங் வட்டார பொது குழாய்- தாமான் வாவாசான், ஜாலான் யுஎஸ்ஜே 2/2ஜி, ஜாலான் டிபி2, சுபாங் தொழில்பேட்டை, யுஎஸ்ஜே 1/3.

கோம்பாக் ஓரிட மையம்.பெர்சியாரான் கெனாகா, பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, ஜாலான் 23/56, ஏயு3 கிராமாட் ஏயோன் பிக் அம்பாங், தாமான் டகாங் பெர்மாய், கோம்பாக் பொது குழாய்,லெம்பா ஜெயா செலாத்தான், ஏயு3 கிராமாட், ஜாலான் 10, தாமான் கிரீன்வூட், ஜாலான் ஸ்ரீவங்சாமாஸ், சுங்கை பூசு தேசிய பள்ளி, தாமான் முத்தியாரா கோம்பாக், ஜாலான் முத்தியாரா 6, தாமான் செலாயாங் முத்தியாரா.

கோலாலம்பூர் ஓரிட மையம், கூ.பி. பள்ளிவாசல் கார் நிறுத்துமிடம், லோரோங் ராஜா மூடா அப்துல் அஜிஸ்,கோலாலம்பூர் மருத்துவமனை திடல், கோலாலம்பூர் பொது குழாய், சுங்கை பீசி ஜேகேஆர் குடியிருப்பு, பாடாங் மெர்போக்.

கிள்ளான் ஓரிட மையம், பண்டார் சுல்தான் சுலைமான் பள்ளிவாசல், லிங்காரான் சுல்தான் அப்துல் சமாட் 2, பண்டார் பார்க்லெண்ட், ஜாலான் டெலிமா, தாமான் ராக்யாட், ஜாலான் துன் டாக்டர், இஸ்மாயில், மஸ்ஜிட் உமுரியா, ஜாலான் கெபுன் பாரு, காப்பார், டேவான் எம்பிஎஸ்ஏ, செக்சன் 27, ஜாலான் சுங்கை காப்பிஸ் 27/711, செக்சன் 4, ஷா ஆலம்

கிள்ளான் பொது குழாய்.பெர்சியாரான் செத்தியா மூர்னி, ஜாலான் கெனாங்கான், பெக்கான் மேரு, ஜாலான் ஜாப்பின் 2, பண்டார் புக்கிட் ராஜா

 


Pengarang :