SELANGOR

தாமான் செந்தோசா பகுதியில் சாலையோரம் குப்பைகள் எரிப்பு சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கண்டனம்

கிள்ளான், செப் 4- இங்குள்ள வீடமைப்பு பகுதிக்கு அருகே சுமார் ஒரு டன் குப்பைகளை பொறுப்பற்ற நபர்கள் சாலையோரம் கொட்டி எரியூட்டியுள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகசெந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கூறினார்.

சுமார் ஒரு டன் அளவுக்கு மணிகள் மற்றும் சரங்களை உள்ளடக்கிய அலங்காரப் பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் எரித்துள்ளது தங்களின்  தொடக்கக் ஆய்வில் தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

அந்த நபர்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டியதோடல்லாமல் அவற்றுக்கு தீமூட்டியும் உள்ளனர். பொறுப்பற்ற இச்செயல் சுற்றுவட்டார மக்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படும் சம்பவங்களைக் கண்டறிவதற்காக சிறப்பு குழுஒன்றை அமைக்கும்படி தாம் இவ்வட்டார குடியிருப்பாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த குப்பைகளை அகற்றும் பணிக்காக கிள்ளான் நகராண்மைக் கழகம் மற்றும் கும்புலான்டாருள் ஏசான் பெர்ஹாட்டின் குப்பை அகற்றும் நிறுவனம் ஆகியவற்றின் உதவியை தாம் நாடியதாகவும் அவர் சொன்னார்.

இந்த பொறுப்பற்றச் செயலை புரிந்த நபர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டுஅவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தாம் நம்புவதாக குணராஜ் மேலும்தெரிவித்தார்.


Pengarang :