NATIONAL

இவ்வாண்டில் 945 இளைஞர்கள் திவால்

கோலாலம்பூர், செப் 11- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 18 முதல் 35 வயது வரையிலான 945 இளைஞர்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டதாக பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ ஷாபுடின் யாஹ்யா தெரிவித்தார்.

திவாலானவர்களில் 100 பேர் 31 முதல் 35 வயது வரையிலானவர்கள் என்பதை மலேசிய திவால் துறையின் பதிவுகள் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

திவால் எண்ணிக்கையை குறைப்பதற்காக விழிப்புணர்வு பிரசாரம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தாங்கள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலவையில் இன்று கேள்வி நேரத்தின்போது துணையமைச்சர் இவ்வாறு கூறினார். திவாலான இளைஞர்களின் எண்ணிக்கை மற்றும் கோவிட்-19 காரணமாக திவாலானவர்களுக்கு உதவ அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இது குறித்து மேலும் விளக்கிய துணையமைச்சர், ஏ.பி.கே.பி. எனப்படும் கடன் நிர்வாக ஆலோசனை நிறுவனம் வாயிலாகவும் இளையோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக சொன்னார்.


Pengarang :