SELANGOR

மாநில அரசுக்கு எதிராக பொய்ச் செய்திகள் மந்திரி புசார் வேதனை

கோம்பாக், செப் 17- பொய்யான செய்திகள் பரப்பபடும் சம்பவங்கள் சிலாங்கூர் அரசுக்கு பெரும் சவாலாக விளங்குவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது போன்ற செய்திகள் பொது மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுங்கை பெலெம்பாஸ் விவகாரம், பள்ளிவாசல் மற்றும் சூராவ் பணியாளர்களுக்கான சம்பள ஒருங்கிணைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாநில அரசு மீது சில தரப்பினர் பலவிதமான அவதூறுகளை பரப்பி வருவதாக அவர் சொன்னார்.

இவ்விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்ட போதிலும் பொறுப்பற்ற சில தரப்பினர் இவற்றை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.

சில தரப்பினர் தவறான செய்திகள் மூலம் நொடிக்கு நொடி மாநில அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர். எனினும், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி மாநில அரசு தனது கடமையை முறையாக ஆற்றி வருகிறது என்றார் அவர்.

இங்குள்ள சியான்தான் மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினர்.

இது போன்ற சவால்கள் மாநில அரசுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளதாக கூறிய அவர், மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் மீது கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :