NATIONAL

உதவிக்கு ஓட்டு உபாயமா? பிரதமர் மொகிதீன் யாசினுக்கு எச்சரிக்கை!

பிரதமர் மொகிதீன் யாசின்  ஓட்டுக்கு உதவி என்ற குறுகிய எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் பிரச்சாரபகுதி  இயக்குனரும் லெம்பா பந்தாய்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பஹாமி பட்சில் அறிவுறுத்தினார்.

இக்கட்டான வேளைகளில் மக்களுக்கு உதவுவது ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாகும் அதில் கட்சி பேதம் கட்டுவதும் ஓட்டுக்கு உதவி என்ற எண்ணத்தை விதைப்பதோ அல்லது அப்படிப்பட்ட மனநிலையை, கொண்டிருப்பதோ கண்டிக்கத்தக்கது என்றார் அவர்,

மக்களுக்கு உதவப் பதிலுக்கு அவர்கள் வாக்களித்துக் கைமாறு செய்ய வேண்டும், அல்லது அந்த மாநிலம் அவர் கூட்டணியின்  ஆட்சியின் கீழிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிரு -ந்தால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின் தனது பிரதமர் பதவியைக் கைவிட வேண்டும் என்றும்  பஹாமி பட்சில் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் சபா கூடாட்டில் உரையாற்றும் பொழுது சபா மக்கள் மேலும் அதிக உதவிகளைப் பெற மத்திய அரசுடன் ஒத்த கருத்துடைய தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகப் பெர்னாமா செய்தி  வெளியிட்டுள்ளது,

 முன்பு அரசியலில்  ”பணமே பிரதானம்” என்ற பாரிசானின் கொள்கையை  விமர்சித்தவர் அவர். ஆனால் இப்பொழுது சபா மக்களுக்குத் தனது உதவி தேவையென்றால்  தனக்கு ஆதரவானவர் களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது அவரை விமர்சனத்துக்குக் கொண்டு வருகிறது என்றார் அவர்.

 எதிர்வரும் செப்டம்பர் 26ந்தேதி சபா மக்கள் 73 சட்டமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க உள்ளனர், அந்தக் களத்தில் கெஅடிலான் கட்சியின் ஏழு உறுப்பினர்களும் வாரிசான் பிலாஸ் கூட்டணியின்  கீழ் களமிறங்கியுள்ளனர்.

 சபா மக்கள் அரசியல் ஞானம்மிக்கவர்கள், வைரத்திற்கும் போலிக்கும் இடையே உள்ள வேறு பாடுகளை அறியாதவர்கள் அல்ல, அவர்கள் சிறந்த முடிவு எடுப்பார்கள் என்றார் லெம்பா பந்தாய்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பஹாமி பட்சில்.


Pengarang :