Jabatan Pengairan dan Saliran meletakkan pam
NATIONALSELANGOR

கடல் பெருக்கு: வடிகால்கள் மீது ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை

ஷா ஆலம், செப் 21- கடலில் எழும் உயர் அலைகள் காரணமாக கரையோரப் பகுதிகளில் நீர்ப் பெருக்கு ஏற்படுவதை தவிர்க்க வடிகால் மற்றும் ஆறுகள் மீது ஆய்வு 
மேற்கொள்ளும்படி கிள்ளான் நகராண்மைக் கழகமும் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத்துறையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கடல் சீற்றம் காரணமாக பல பகுதிகளில் தடுப்பணை உடைந்து கடல் நீர் குடியிருப்பு 
பகுதிகளில் நுழைந்ததாக கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் எஜமான் ஹூரி கூறினார். 

கம்போங் பெண்டாமார், தாமான் தெலுக் காடோங் இண்டா, கோலக் கிள்ளான் ஆகிய பகுதிகளில் கடல் நீர் அதிகளவில் புகுந்ததாக அவர் சொன்னார்.

இது போன்ற பிரச்சினைகள் இனியும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய தடுப்பணையை சீர் செய்வது உள்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும்படி தாம் கிள்ளான் நகராண்மைக் கழகம் மற்றும் வடிகால் நீர்ப்பாசனத்துறையை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Pengarang :