NATIONAL

வெ. 1,000 வெகுமதி தொகைக்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்! உயர் கல்விக்கூட மாணவர்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், செப் 21- உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு சிலாங்கூர் அரசு வழங்கி வரும் 1,000 வெள்ளி வெகுமதி தொகைக்கு விரைந்து விண்ணப்பம் செய்யும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்திருக்க  வேண்டிய இந்த விண்ணப்பத்திற்கான காலக்கெடு வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த உயர்கல்விக்கூட மாணவர்கள் இந்த வெகுமதி தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் சொன்னார்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் hpipt.selangor.gov.my இணையத்தளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

மூவாயிரம் வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு வெகுமதி வழங்கும் திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், இத்திட்டத்தில் மேலும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் குடும்ப வருமானத்திற்கான உச்ச வரம்பு 5,000 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டது.


Pengarang :