— fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

உலகின் சிறந்த மருத்துவ சுற்றுலா மையமாக மலேசியா மீண்டும் தேர்வு

கோலாலம்பூர், செப் 24- உலகின் சிறந்த மருத்துவ மற்றும் சுகாதார சுற்றுலா மையமாக மலேசியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் நகரில் நேற்று நடைபெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவச் சுற்றுலா விருதளிப்பு நிகழ்வில் இவ்வாண்டிற்கான தலைசிறந்த சுகாதார,மருத்துவ சுற்றுலா மையம் எனும் அந்த விருது மலேசியாவுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த விருதை மலேசியாவில் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் அனைவருக்கும் சமரப்பிப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினர்.

இதனிடையே, மலேசியா தொடர்ச்சியாக நான்காவது முறையாக இந்த விருதை வென்றுள்ளதாக மலேசிய மருத்துவ சுற்றுலா மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

தலைசிறந்த மருத்துவ சுற்றுலா மையம் என்ற இந்த அங்கீகாரம் மலேசியாவின் பெயரை உலக அளவில் உயரச் செய்துள்ளது என்றும் அது கூறியது.

சுகாதார பராமரிப்பில் குறிப்பாக கோவிட்-19 நோய்த் தொற்றை துடைத்தொழிப்பதில் மலேசியா காட்டி ஈடுபாட்டை பிரதிபலிக்கும் வகையிலும் இந்த வெற்றி அமைந்துள்ளது என அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.


Pengarang :