NATIONALSELANGOR

வீட்டிலிருந்து வேலைச் செய்ய முழு ஊதியம்

கோலாலம்பூர், அக் 22;- இந்தக் கோவிட்19 நோய் தொற்றுக் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டினால் வீட்டிலிருந்து வேலைச் செய்ய நேரிடும் பணியாளர்களின் முழு ஊதியத்தையும் அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் வழங்க வேண்டும், அந்த நிறுவனங்கள் பணியாளர்களைச் சம்பளமற்ற விடுப்பு எடுக்கவோ அல்லது அவர்களின் ஆண்டு விடுப்புகளிலிருந்து கழிக்கவோ கூடாது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.

இது கடந்த மார்ச் மாதத்தில் கோவிட் 19 நோய் பெருந் தொற்றைத் தொடர்ந்து அமல்படுத்தப் பட்ட நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டத் தடை உத்தரவு விதிகளுக்கு ஏற்பவே இது நடைமுறை படுத்த படுவதாகக் கூறினார்.

இருப்பினும், இரு தரப்பு நலனைக் கருத்தில் கொண்டு தங்கள் பணியாளர்களுடன் முதலாளிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என்றார் அவர்.

இருப்பினும் எல்லாத் தரப்பினரும் இது குறித்து மேற் கொண்டு தகவல்களைப் பெற விரும்பினால் மனித வள அமைச்சுடன் 03-88862352 03-88862409 மற்றும் 03-88889111 மேற் கண்ட எண்களில் தொடர்பு கொண்டு விபரமறியலாம் என்றார் அவர்.
.
இன்று தொடங்கிச் சிலாங்கூர், சபா, கோலாலம்பூர், புத்ராஜெயா லாபுவான் ஆகிய கோவிட் 19 நோய் தொற்று சிகப்பு மண்டலங்களைச் சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார்த் துறையைச் சார்ந்த 10 லட்சம் பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவிடப் பட்டுள்ளது.


Pengarang :