SELANGOR

வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையை குறைக்க சிலாங்கூர அரசு இலக்கு

ஷா ஆலம், 1– சிலாங்கூர் அரசின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 12 கோடியே 30 லட்சம் வெள்ளி பற்றாக்குறையை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவ்வாண்டிற்கான பற்றாக்குறையை விட ஒரு கோடி வெள்ளி குறைவாகும்.

மாநில அரசின் வருமானம் 220 கோடி வெள்ளியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள வேளையில் செலவினம் 230 கோடி வெள்ளியாக இருக்கும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பொதுமக்கள், வணிக சமூகத்தினரின் பயனுக்காகவும் மேம்பாட்டை உறுதி செய்யவும் மாநில  அரசின் நிதி வளம் தொடர்ந்து வலுவானதாகவும் ஆக்ககரமானதாகவும் உள்ளது உறுதி செய்யப்படும் என்றும் மாநில சட்டமன்றத்தில் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் கூறினார்.

இதன் அடிப்படையில் 232 கோடியே 30 லட்சம் வெள்ளி மதிப்பிலான 2021ஆம் ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மாநில அரசு பரிந்துரைக்கிறது அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று வரவு செலவுத் திட்டங்களில் பற்றாக்குறையை குறைப்பதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். விவேகமான செலவினம், திறன்மிக்க வேலை கலாசாரம் மற்றும் உயர்நெறி மூலம் இது சாத்தியமானது என்றார் அவர்.


Pengarang :