NATIONAL

கோவிட்-19 தடுப்பூசி மையங்களாக செயல்பட 605 இடங்கள் தேர்வு

கோலாலம்பூர், பிப் 17– கோவிட்-19 தடுப்பூசி மையங்களாக செயல்படக்கூடிய 605 இடங்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

தற்காலிக தடுப்பூசி மையங்களாக பயன்படுத்துவதற்கு விளையாட்டு அரங்கங்கள், மாநாட்டு மையங்கள், பொது மண்டபங்கள், பல்கலைக்கழகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு செயல் குழு வெளியிட்ட வழிகாட்டி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, தேவையின் அடிப்படையில் புதிய மையங்கள் திறக்கப்படும் என்பதோடு அதன் தொடர்பான விபரங்கள் அவ்வப்போது வெளியிட்டப்படும் என்று அந்த வழிகாட்டி புத்தகம் மேலும் கூறியது. பைசர்-பயோன்டெக் தடுப்பூசி வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இம்மாதம் 26 ஆம் தேதி தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும். இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளை தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கு 54 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் மற்றும் விநியோகிக்கும் பணியை சுகாதார அமைச்சு, இராணுவம் மற்றும் இதர தற்காப்பு படையினர் ஒருங்கிணைந்து மேற்கொள்வர்.


Pengarang :