NATIONAL

மேசையில் இருவருக்கு மேல் அமர்ந்து உணவருந்த உணவகங்களுக்கு அனுமதி

கோலாலம்பூர், பிப் 19– மேசையில் இருவருக்கும் மேல் அமர்ந்து உணவருந்த உணவகங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், மேசையின் அளவைப் பொறுத்து  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இந்த புதிய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையின் கீழ் மேசைக்கு இருவர் என்று நிபந்தனை இனியும் அமல்படுத்தப்படாது என்று அவர் சொன்னார்.

எனினும், ஒரு மீட்டர் இடைவெளி என்ற சமூக இடைவெளியை சம்பந்தப்பட்ட உணவகங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேசையின் அளவைப் பொறுத்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது மற்றும் ஒரு மீட்டர் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையிலான இந்த புதிய விதிமுறை நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளிலும் அமல் படுத்தப்படும் என்றார் அவர்.


Pengarang :