MEDIA STATEMENTNATIONAL

எச்சரிக்கை ! ஊழலை ஒழிப்பதில் விட்டுக் கொடுக்க முடியாது.

ஜோர்ஜ் டவுன், மார்ச் 18– அரசு ஊழியர்கள் மத்தியில் ஊழல் நடவடிக்கைகளை துடைத்தொழிக்கும் விஷயத்தில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று பொதுச் சேவை ஆணையம் எச்சரித்துள்ளது.

‘தவறை தைரியமாக செய்தால், விளைவுகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள்‘ என்று அரசாங்க ஊழியர்களுக்கு பொதுச் சேவை ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஜைனால் ரஹிம் செமான் நினைவுறுத்தினார்.

அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் விதிமுறை மீறல் தொடர்பில் தமது துறை ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடித்ததில்லை என்று அவர் சொன்னார்.

அரசாங்க ஊழியர்களின் சட்ட மீறலை குறிப்பாக ஊழலில் ஈடுபடுவதை நாங்கள் கடுமையாக கருதுகிறோம். அச்செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படாது என்றார் அவர்.

குற்றச்செயல்கள், ஊழல், தவறான நடத்தை போன்ற குற்றங்களைப் புரியும் அரசாங்க ஊழியர்கள் மீது பணி நீக்கம் உள்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

விதிமுறைகளை மீறி செயல்படும் லோரி ஓட்டுநர்களை பாதுகாக்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தொடர்பில்  சாலை போக்குவரத்து இலாகாவை சேர்ந்த 32 அதிகாரிகள் உள்ட 44 பேர் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :