GEORGE TOWN, 5 Jun — Anggota TLDM sedang membuat persiapan sebelum melaksanakan Op Benteng dengan khidmat KD Lekiu semasa melaksanakan Op Benteng di sekitar perairan Selat Melaka Utara hari ini.?Rondaan Kapal Diraja (KD) Lekiu milik Tentera Laut Diraja Malaysia (TLDM) di perairan Selat Melaka Utara bertujuan untuk mengekang kegiatan jenayah rentas sempadan Pendatang Asing Tanpa Izin (PATI), pelanunan, pemerdagangan manusia, penyeludupan dan pencerobohan nelayan asing yang dijangka semakin meningkat akibat pandemik COVID-19.?–fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
SELANGOR

நாட்டைக் காப்பதில் கடற்படை எப்போதும் முன்னிலை வகிக்க வேண்டும்- சிலாங்கூர் சுல்தான் வேண்டுகோள்

ஷா ஆலம், ஏப் 27– நாட்டின் இறையாண்மையைக் காப்பதில் கடற்படை எப்போதும் முன்னிலை வகித்து வர வேண்டும் என்று  மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

அந்த சீருடைப் படைப் பரிவினர்  நாட்டின் கடற்பகுதியை அந்நிய அச்சுறுத்தல்களிலிருந்து எப்போதும் காத்து வர வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தியதாக சிலாங்கூர் அரச அலுவலகம்   வெளியிட்ட அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படை வீரர்கள் எப்போதும் தங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய பணியை ஆற்றுவதில் அவர்கள் உயந்த பட்ச உத்வேகத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அரச மலேசிய கடற்படையின் தலைமை கேப்டன் என்ற முறையில் சுல்தான் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச மலேசிய கடற்படையின் 87வது நிறைவை தினத்யொட்டி வழங்கிய வாழ்த்துச செய்தியில் அவர் இவ்வாறு கூறினார்.

முழு ஈடுபாட்டுடனும் விசுவாசத்துடனும் தங்கள் பணியை ஆற்றி வரும் கடற்படை வீரர்களுக்கு தாம் நன்றியைத் தெரிவித்துக கொள்வதாகவும் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.

 


Pengarang :