ANTARABANGSANATIONALSELANGOR

சிறு வணிகர்களின் பொருள்களை சந்தைப் படுத்துவதில் “”பிளாட்ஸ்” திட்டம் உதவும்

ஷா  ஆலம், மே 5– சிறு வணிகர்களின் பொருள்களைச் சந்தைப் படுத்துவதில் உதவும் நோக்கில் “பிளாட்ஸ்” எனப்படும் பிளாட்பார்ம் சிலாங்கூர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சோஃப்பான் அப்பாண்டி அமினுடின் கூறினார்.

சம்பந்தப்பட்ட பொருள் பரவலாகும் போதுதான் அந்த வணிகத்தின் வெற்றியை உணர முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஒரு பொருள் பரவலாக கிடைக்கும் போதுதான் அதன் சந்தையும் உயரும் என்பது நிதர்சனமான உண்மை. அனைவருக்கும் பலன் தரக்கூடிய இத்தகைய திட்டத்தை நாம் ஏன் அமல்படுததக்கூடாது என்பதுதான் தற்போதைய கேள்வி என்று அவர் குறிப்பிட்டார்.

விளம்பரப்படுத்துதல் என்பது வியாபாரத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. ஆனால் அதற்கு செலவு செய்ய யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆகவே இந் பிளாட்ஸ் திட்டத்தில்  விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளோம் என்றார் அவர்.

இந்த பிளாட்ஸ் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசின் துணை நிறுவனமான பெர்மோடலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட்,  ஹிஜிரா சிலாங்கூர் மற்றும் கிராப் எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அமல்படுத்தி வருகிறது.


Pengarang :