ECONOMYNATIONALSELANGOR

மக்கள் எல்லை கடப்பதை தடுக்க கடுமையான சாலைத் தடுப்புச் சோதனைகள்

கோலாலம்பூர், மே 8-நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தை தொடர்ந்து கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் போலீசார் அனைத்து டோல் சாவடிகளிலும் சாலைத் தடுப்புச் சோதனைகளை கடுமையாக்கியுள்ளனர்.

புத்ரா ஜெயா தவிர்த்து கோலாலம்பூரில் மட்டும் குறைந்தது ஒன்பது சாலை தடுப்புகளை ஏற்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.

புத்ரா ஜெயாவில் நான்கு சாலைத் தடுப்புகளையும் கோலாலம்பூரில் குறைந்தது ஒன்பது சாலைத் தடுப்புகளையும் இன்று தொடங்கி ஏற்படுத்தவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சாலைத் தடுப்புகளில் பணியாற்றும் போலீஸ்கார்களின் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட போது, இதர பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பையும் தாங்கள் பெறுவதால் போலீசாரின் எண்ணிக்கை நேரத்திற்கு  தக்கவாறு முடிவு செய்யப்படும் என்றார்.

இதனிடையே, சிலாங்கூரில் மேற்கொள்ளப்படும் சாலைத் தடுப்புகள் குறித்து கருத்துரைத்த மாநில  போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது, அனுமதியின்றி மாநில எல்லைகளைக் கடக்க முயல்வோரை தடுப்பதற்கு மாநிலத்தில் 50 முதல் 70 விழுக்காடு சாலைத் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று சொன்னார்.

முறையான அனுமதி இல்லாத பட்சத்தில் எல்லை கடக்க முயல்வோர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :