HEALTHNATIONAL

நாட்டின் தினசரி நோய்த்தொற்று விகிதாசார படி, பேராக் முன்னணி

கோலாலம்பூர், மே 14 – நேற்று மலேசியா முழுமைக்கும் தினசரி நோய்த்தொற்று விகிதாசார கோவிட் -19 தொற்று படி, நாட்டின் சராசரி வீதம் (Rt) 1.14 ஆக இருந்துள்ளபோது, பேராக் மிக உயர்ந்த Rt ஐ 1.32 ஆக பதிவு செய்துள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ள ஒரு விளக்கத்தின் மூலம், திராங்கானு 1.29 என்ற விகிதாசாரத்தில் இரண்டாவது மிக உயர்ந்த இடத்தை பதிவு செய்துள்ளது.

அவர்களைத் தொடர்ந்து கெடா (1.22), பினாங்கு (1.21), மலாக்கா (1.18), சிலாங்கூர் மற்றும் ஜோகூர் (இரண்டும் 1.17), நெகிரி செம்பிலான் (1.12), பஹாங் (1.11), கோலாலம்பூர் (1.10), புத்ராஜெயா (0.99), சரவாக் (0.98), கிளாந்தான் (0.94), சபா (0.89).

மலேசியாவில் நேற்று 4,855 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகி, மொத்த எண்ணிக்கை 458,077 ஆகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்


Pengarang :